தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை, அக்டோபர்-03

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற ஆண்டு தோறும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதிக்காக இதுவரை சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டு தோறும் தலா 2 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிதியை உயர்த்துமாறு சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 3 கோடி ரூபாயாக அதிகரித்து பேரவையில் அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டரை கோடியிலிருந்து ரூ.3 கோடியாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *