இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70,756ஆக உயர்வு.. இதுவரை 2293 பேர் உயிரிழப்பு..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2293 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, மே-12

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 70,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3604 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2293 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 23401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 868 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 8541 பேருக்கும், தமிழகத்தில் 8002 பேருக்கும், டெல்லியில் 7233 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3785 பேருக்கும், ராஜஸ்தானில் 3988 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3573 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *