போலீசுக்கும் நிவாரணம் வழங்கிய அமைச்சர் SP வேலுமணி..!

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 450 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.

கோவை, மே-11

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 7500 பேருக்கு முழு கவச உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், காலநேரம் பாராது மக்களுக்கு சேவையாற்றும் கோவை மாநகராட்சி காவல்துறையினருக்கு நிவாரண பொருட்களை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சார்பாக 8 லட்சம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம் அதேபோல என்னுடைய சகோதரர் அறக்கட்டளை மூலம் 20 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நோய்த்தொற்று இல்லாமல் தவிர்த்துள்ளோம் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் காவல் துறையினர் சுகாதாரப் பணியாளர்கள் உள்பட அனைத்து துறையினரின் ஒத்துழைப்போடு தான் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முடிந்தது எனவே அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் உலகத்திலேயே உயிரிழப்பு குறைவாக உள்ளது தமிழகத்தில்தான் இன்று மட்டும் மொத்தமாக 20 ஆயிரத்து 450 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்குகிறோம் மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் என ஆயிரம் பேருக்கும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் 700 பேருக்கும் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆயிரத்து 350 பேர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2300 பேர் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 750 பேர் ஊராட்சியை சேர்ந்த தூய்மை காவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 2450 பேர் என மொத்தம் 20 ஆயிரத்து 450 பேருக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம் அதேபோல கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கொடுத்து எனவே எந்த பிரச்சினை வந்தாலும் உடன் இருந்து பார்த்துக் கொள்வோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *