தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.4,91,79,379 கோடி அபராதம் வசூல்..!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக, இதுவரை 4,28,015 வழக்குகளும், ரூ.4,91,79,379 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-11

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அவசியமின்றி வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியில் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,54,016 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5434 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 3,75,792 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5993 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது. இதுவரை 4,28,015 வழக்குகளும், ரூ.4,91,79,379 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5240 வழக்குகளும், ரூ.5,05,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *