கொரோனா பாதிப்பில் 3ம் இடத்துக்கு வந்த தமிழகம்..!

கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடம்..தமிழகத்தில் 7204 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, மே-11

இந்தியாவில் 67 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4213 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2206 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 20917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 22171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 832 பேர் பலியாகி உள்ளனர். 4199 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் இதுவரை 8194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 493 பேர் உயிரிழந்துள்ளனர். 2545 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 7204 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 49 பேர் உயிரிழந்துள்ளனர். 1959 பேர் குணமடைந்துள்ளனர். 6923 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட டெல்லி 4ம் இடத்தில் உள்ளது.

கொரோனா தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்கள் வருமாறு:-

மகாராஷ்டிரா – 22171
குஜராத் – 8194
தமிழ்நாடு – 7204
டெல்லி – 6923
ராஜஸ்தான் – 3814
மத்திய பிரதேசம்- 3614
உத்தர பிரதேசம் – 3467
ஆந்திரா- 1980
மேற்கு வங்காளம் – 1939
பஞ்சாப் – 1823
தெலுங்கானா – 1196.

இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கடந்த 2 வாரங்களாக 4-வது இடத்தில் இருந்த தமிழகம் இன்று 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *