மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை விளக்கம்..

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி, மே-11

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்குக்கு நேற்று இரவு அவரது வீட்டில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கை, மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 87 வயதாகும் மன்மோகன் சிங்குக்கு கடந்த 2009ம் ஆண்டு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக உள்ளது. இருதய மருத்துவர்கள் மன்மோகன் சிங்கின் உடல்நிலையை கவனித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *