மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு

மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லி, சென்னை உட்பட 15 முக்கியமான நகரங்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணி முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மே-10

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ளது. மே 12 செவ்வாய்க்கிழமை முதல் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள், நாளை திங்கள்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணைய தளத்தில் மட்டுமே பயணத்துக்கான முன்பதிவுகள் செய்ய முடியும்.

முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் ரயில்நிலையத்தில் அனுமதிக்கப்படுவர். 20,000 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. டெல்லிக்கும் 15 முக்கிய நகரங்களுக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படும்.

சென்னை, செகந்திராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, ஆமதாபாத், ஜம்மு – தாவி போன்ற நகர்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. நீண்ட நாள்களாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் போக்குவரத்தைத் தொடங்கும் விதமாக தொடக்கத்தில் குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு ரயில்களில் முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்று இருப்பவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *