நீட் ஆள் மாறாட்ட புகார்: சிபிஐ விசாரணை தேவை

திருவாரூர், அக்டோபர்-03

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூரை அடுத்த காட்டூரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவாக அருங்காங்காட்சியகம் கட்டுவதற்கான நிலம் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி ஆகியோரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரப் பதிவு திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்திருப்பதாகவும், வெளிமாநில தரகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது என்றும், வெளி மாநிலத்தவர்கள் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாளன்று காட்டூரில் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *