5வது முறையாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி, மே-10

கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள் இடையே காணொலி காட்சி மூலம் நாளை நடைபெற ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டமானது, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 5-வது முறையாக நடைபெற உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *