கருஞ்சிவப்பு மண்டலங்களான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர்.. ராயபுரம் 571 பாதிப்புடன் முதலிடம்..

சென்னை கோடம்பாக்கத்தில் அதிக பாதிப்பு இருந்த நிலையில் ஒரேநாளில் ராயபுரத்தில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அதிக பாதிப்பில் ராயபுரம் முதலிடத்தில் உள்ளது.

சென்னை, மே-10

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கோடம்பாக்கம் மண்டலத்தில் 563 பேரும், திருவிக மண்டலத்தில் 519 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டலமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *