தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?.. மே 12ல் ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை..

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, மே-10

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2-5-2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்துகளை கேட்க உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் முறையில், முதல்வர் நடத்த உள்ள ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், ஊரடங்கு நீட்டிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளார். கொரோனாவை தடுக்க அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு மற்றும் சிறப்பு நிபுணர் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். மே 17 க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *