தமிழகத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பலி..

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு முதன்முறையாக தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மே-10

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,535-ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 58 வயதுடைய ஆண் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் சென்னை ராயபுரத்தில் துப்புரவு பணியை செய்து வந்தவராவார். இவருக்கு நேற்று முன் தினம் முதல் அதிகமான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் நேற்று இரவு வரை எந்த வித பாதிப்பும் இல்லாமல் உடல்நிலையும் சீராக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்று அதிகாலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.

கொரோனாவுக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது முதல் முறையாக தூய்மை பணியாளர் உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *