கர்நாடகாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்: மத்திய அரசுடன் ஆலோசனை

பெங்களூரு, அக்டோபர்-03

கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து என்.ஆர்.சி. தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் பஸ்வராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

அசாம், டெல்லி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.  இது குறித்து பேசியுள்ள கர்நாடகா உள்துறை அமைச்சர் பஸ்வராஜ் பொம்மை, கர்நாடகாவில் எல்லை தாண்டி சட்டவிரோதமாக குடியேறும் நபர்கள் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் பஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உள்துறை அமைச்சரின் கருத்துக்கு ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் டன்வீர் அகமத் பதிலளித்துள்ளார். முதலில் உள்துறை அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்தட்டும், பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடை பார்த்துக்கொள்ளலாம் என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *