திருமழிசை தற்காலிக சந்தை நாளை முதல் இயக்கம்.. பணிகள் மும்முரம்..

சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை நாளை (திங்கள்கிழமை) முதல் இயக்கப்படவுள்ளது.

சென்னை, மே-10

சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டது. இதையடுத்து, காய்கறி மொத்த விற்பனை சந்தை தற்காலிகமாக திருமழிசையில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி திருமழிசையில் காய்கறி விற்பனைக்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக செய்யப்பட்டு வந்தன. போதிய சமூக இடைவெளியுடன் 200-க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

திருமழிசை தற்காலிக காய்கறிச் சந்தையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

அப்போது வியாபாரிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், காய்கறிச் சந்தையின் கட்டமைப்பு வசதிகள் ஆகியன குறித்து அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர். காய்கறிச் சந்தையின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இதன்பின் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுமுதல் திருமழிசை தற்காலிக சந்தைக்கு காய்கறிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. திங்கள்கிழமை(மே 11) அதிகாலை முதல் திருமழிசை காய்கறிச் சந்தை முழு வீச்சில் இயங்கும் என வியாபாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *