கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை.. அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு, மே-9

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார். 2 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகின்றனர். நாளை மறுதினம் ஆடிட்டர் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும். கொரோனா நோய் தொற்றுக்கு தீர்வு காணப்பட்டவுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனையின் பேரில் உயர் மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். பள்ளிகள் திறந்ததும் மாணவ- மாணவிகளுக்கு சமூக இடைவெளி குறித்து கற்றுத்தரப்படும்.

பள்ளிகள் தொடங்கியதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், காலணி போன்றவைகள் வழங்கப்படும். தனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *