வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர் செல்வதற்கான செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-9

நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், ரயில் டிக்கெட்டுக்கு பணம் இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழக அரசே ரயில் கட்டணத்தை ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வெளிமாநில தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு உண்டான இரயில் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும். இதற்கான நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *