எனக்கு எந்த நோயும் இல்லை.. பூரண உடல்நலத்துடன் இருக்கிறேன்.. அமித்ஷா விளக்கம்..

தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என பரவியது தவறான தகவல் என்றும், தான் எந்த வித நோயாளும் பாதிக்கப்படவில்லை எனவும், பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மே-9

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல்நிலை தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவியது. இந்நிலையில் தாம் நலமுடன் இருப்பதாகவும், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்து நாடு போராடி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களில் பரவும் இது போன்ற தகவல்களை நான் கண்டுக்கொள்வதில்லை. நேற்று இரவு எனது கவனத்திற்கு இவை வந்த போது, வதந்தி பரப்புவர்கள் அனைவரும் தங்களின் கற்பனை சிந்தனைகளால் மகிழ்ச்சியில் இருக்கட்டும் என்று நான் கருதினேன். எனவே, நான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால், கடந்த இரு தினங்களாக எனது கட்சி தொண்டர்களும், நலம் விரும்பிகளும் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர். அதனை நான் ஒதுக்கிவிட முடியாது. அதனால், இந்த விளக்கத்தை நான் அளிக்கிறேன். நான் முழு உடல்நலத்துடன் உள்ளேன். எந்த நோயும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமித்ஷாவின் பெயரிலான டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியான டுவிட்டை போன்று போலியான ஸ்கீரின் சாட்டை சமூகவலைதளத்தில் பரவ விட்ட 4 பேரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் இந்த போலி டுவிட் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *