பா.ஜ.க.வுக்கு கோட்சேதான் ஹீரோ-ஒவைசி

அவுரங்காபாத், அக்டோபர்-03

மகாத்மா காந்தி பெயரில் கடை விரித்து மக்களை பா.ஜ.க. ஏமாற்றுகிறது என ஒவைசி குற்றம்சாட்டியுள்ளார்.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி மகாத்மா காந்தி பெயரில் கடை விரித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. ஆனால் உண்மையில் பாரதிய ஜனதா கட்சிக்கு காந்தியை கொன்ற கோட்சே தான் ஹீரோவாக தெரிகிறார். அவரை போற்றி மகிழ்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அவர்களில் உதட்டில் மட்டும் மகாத்மா காந்திக்கு இடம் இருக்கிறது. இதயத்தில் கோட்சேவுக்கு தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது என ஓவைசி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *