திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை.. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., நேரில் ஆய்வு

சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னை, மே-9

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றவா்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. கோயம்பேட்டில் காய்கறி சந்தை மூடப்பட்டதையடுத்து, சென்னையை அடுத்த திருமழிசைக்கு காய்கறி சந்தை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யக் கூடிய அளவுக்கு 200 கடைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 20 அடி இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் புதிய காய்கறி சந்தையை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து வியாபாரிகளுக்காக தற்காலிக சந்தையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *