குடும்பமே கொரோனா : பரிதவித்த ஐந்தரை மாத குழந்தைக்கு உதவிய அமைச்சர் S.P. வேலுமணி

சென்னை – மே 9

கொரோனா வைரஸ் பொருளாதாரத்தை மட்டுமல்ல, குடும்ப உறவுகளையும் தனித்தனியாக பிரித்து பரிதவிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் சென்னை முகப்பேரில் கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் சந்தோஷ் குமார் என்பவரது ஐந்தரை மாத ஆண் குழந்தைக்கு மட்டும் கொரோனா நெகடிவ் என்று சோதனையில் தெரிய வந்ததால், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழந்தையை மற்றொருவரிடம் பராமரிக்க சந்தோஷ்குமார் ஏற்பாடு செய்தார். சென்னை NSk நகரில் உள்ள அவருக்கு தெரிந்த வீட்டுக்கு அக்குழந்தை அனுப்பபட்டு பராமரிக்கப்பட்டது. குழந்தையின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி வீடியோ காலில் சந்தோஷ்குமார் குடும்பத்தினர் அறிந்து வந்தனர். ஆனால், திடீரென இரண்டு நாட்களாக குழந்தை கொடர்ந்து அழுததால், சந்தோஷ்குமார் குடும்பத்தினர் கலக்க மடைந்தனர்.

இது பற்றி அறிந்த சந்தோஷ் குமாரின் மாமியார், வேலூரில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்து வரவும், தமது வீட்டில் பேரக்குழந்தை 4 மாதங்கள் இருந்ததால், நன்றாக கவனிக்க முடியும் என்று கேட்டுக் கொண்டார். இது சரி என தீர்மானித்த சந்தோஷ்குமார் குடும்பத்தினர், வேலூருக்கு தமது குழந்தையை அனுப்ப முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை தொடர்ந்தார். முதலமைச்சர் . உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் ட்விட்டர் வழியாக சந்தோஷ்குமார் உதவி கேட்டார்.

தமது குழந்தையை சென்னையில் இருந்து வேலூருக்கு அனுப்ப வாகன வசதி வேண்டும்,தயவு கூர்ந்து உதவவும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அமைச்சர் S.P. வேலுமணி அலுவலகத்தில் இருந்து சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு முழு விவரம் கேட்டறிந்துள்ளனர். நீங்கள் கேட்ட உதவி உடனடியாக செய்யப்படும் என்று சந்தோஷ்குமாருக்கு உறுதியளிக்கப்பட்டது .

இதைத் தொடர்ந்து சென்ளை மாநகராட்சி அனுமதியுடன் வாகனம் அனுப்பப்பட்டு,  ஒருவர் உதவியுடன் அக்குழந்தை பத்திரமாக வேலூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டது. அவசர காலத்தில் இந்த உதவி செய்த அமைச்சர் S.P.வேலு மணிக்கு ட்விட்டர் வழியாக சந்தோஷ்குமார் நன்றி தெரிவித்துக் ளார். இதே போன்று பலருக்கு தனிப்பட்ட முறையிலும் அமைச்சர் வேலுமணி உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *