தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 526 பேருக்கு கொரோனா..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, மே-9

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 6 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 605 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 40 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 824 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 12,999 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட நபர்கள் 2,19,406. இன்றைய தேதியில் மொத்தம் 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்றைக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 279 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *