தமிழகத்தில் 2 நாட்களில் மட்டும் ரூ.294 கோடிக்கு மது விற்பனை

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்த 2 நாட்களிலும் மொத்தம் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

சென்னை, மே-9

நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததன்படி பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஆனால், பல்வேறு மதுக்கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மே 7ம் தேதி ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் திறக்கப்பட்டன. 43 நாட்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் மது விற்பனை அமோகமாக இருந்தது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் முதல் நாளில் ரூ.172 கோடிக்கு மது விற்பனையானது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று 122 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றும் மதுரையில் தான் அதிகபட்ச விற்பனை இருந்தது. மதுரையில் 32.45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியிருந்தது.

தமிழகத்தில் 2 நாட்களில் மொத்தம் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *