தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சென்னை, மே-9

தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. மது விற்பனையைத் தொடர அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், மதுக்கடைகளில் சமூக இடைவெளை பின்பற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளை அமல்படுத்தி மது விற்கப்பட்டது. ஒரு சில இடங்களில் விதிமீறல்களை அமல்படுத்தி ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல. பல மாநிலங்களில் ஊரடங்கின்போது மதுவிற்பனை நடக்கும் போது தமிழகத்தில் விற்கக் கூடாது என்று சொல்லவது தவறானது. எனவே மதுபானக்கடைகளை திறக்க அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *