ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் திறக்கப்படாது.. டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு!

ஊரடங்கு முடியும் வரையில் மதுக்கடைகள் திறக்கப்படாது என டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-9

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சென்னை உயர்நீதிமன்றம் மே 8 அன்று உத்தரவிட்ட படி அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் ஊரடங்கு உத்தரவு முடியும் காலம் வரை மூடுவதாக அறிவித்துள்ளது. எனவே மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் அனைவரும் டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனை கடைகளை அடுத்த உத்தரவு வரும் வரையில் மூடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோல் அனைத்து மாவட்ட மேலாளர்கள் அனைத்து கடைகளிலும் ஷட்டர்கள் சரியாக மூடப்பட்டு இருக்கிறதா, சீல் வைக்கப்பட்டதா பாதுகாப்பு சரியாக இருக்கிறதா என்று எந்தவிதமான திருட்டு சம்பவத்துக்கும் காரணம் இல்லாத வகையில் பாதுகாப்புடன் உள்ளதா என்று உறுதிப்படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியில் மதுபானம் விற்கப்படுவதை விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எந்தவிதமான பிரச்சினைகளும் வரக்கூடாது என்ற வகையில் பாதுகாப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *