திரைப்படப் பணிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு.. முதல்வருக்கு தமிழ்த் தயாரிப்பாளர்கள் நன்றி!

திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் பணிகள் அனைத்தும் நிபந்தனை உடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது . இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை, மே-8

கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், தற்போது மே மாதம் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து தொழில்களும் அப்படியே முடங்கிப்போனது. மேலும் சினிமா துறையில் நடக்கவிருந்த அணைத்து வேலைகளும் அப்படியே நின்றது. இதனால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது. எனினும் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தற்போது அரசுத் தரப்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, திரைத்துறையினருக்கு பொது முடக்கத்தில், படப்பிடிப்பு முடிந்துள்ள திரைப்படங்களுக்கு தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு (போஸ்ட் புரொடக்‌ஷன்) மட்டும் வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான நடைமுறை விதிமுறைகளையும் அரசு அறிவிக்க உள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 11 முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, கிராபிக்ஸ், நிற கிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *