தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 6,009 ஆக உயர்வு..

தமிழகத்தில் இன்று புதிதாக 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மே-8



கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 5 ஆயிரத்து 409 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 547 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 37 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 605 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *