கமலுக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

அக்டோபர்-03

கரைவேட்டி கட்டியவர்களால் தான் தமிழகம் வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக உள்ளது என கமலின் பேச்சுக்கு திமுக எம்.பி.கனிமொழி பதிலளித்துள்ளார்.

கரை வேட்டி கட்டியவர்களால் அரசியலில் கறைபடிந்துவிட்டது என கடந்த சில நாட்களுக்கு முன்பு, கல்லூரி மாணவர்களிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பேசினார். கமலின் இந்த பேச்சு அதிமுக திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, அரசியலில் புதிதாக வந்தவர்கள் பேசும் கருத்துக்களுக்கு பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை என்றும், வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக தமிழகம் இருக்கிறது என்றால், அதற்கு திமுகவும், கரை வேட்டி கட்டிய கருணாநிதியுமே காரணம் என்றும் தெரிவித்தார். மேலும், அரசியல் தெரிந்தவர்களுக்கு தான் கரை வேட்டியின் அருமை தெரியும் என்றும் கனிமொழி குறிபிட்டார்.

இதேபோன்று, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசன் ஒரு இன்ஸ்டண்ட் சாம்பார் மாதிரியும், அவர், அவ்வப்போது மட்டும் வந்து கருத்துக்களை கூறிவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவிடுவார் என கடுமையாக விமர்சித்துள்ளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *