பணியின் போது உயிரிழந்த தலைமை காவலர் சேட்டு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மே-8

இது தொடர்பாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜுஜுவாடியில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த தலைமைக் காவலர் சேட்டு உயிரிழந்தார். லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தலைமைக் காவலர் சேட்டை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *