தமிழகத்தில் ஒரேநாளில் ரூ. 170 கோடிக்கு மது விற்பனை.. மதுரை முதலிடம்..

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் மது விற்பனை ரூ.170 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, மே-8

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் 44 நாட்களுக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன. தமிழகத்தில் 5,299 டாஸ்மாக் கடைகளில், சென்னையில் இருக்கும் 536 கடைகள் தவிர்த்து பிற கடைகள் நேற்று முதல் செயல்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இருப்பினும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, கொளுத்தும் வெயிலில் நின்று வாங்கிச் சென்றனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 170 கோடி அளவுக்கு விற்பனை நடந்து இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக நேற்று ரூ. 37 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. திருச்சியில் ரூ. 32 கோடி, சேலத்தில் ரூ. 33 கோடி, கோவையில் ரூ. 34 கோடி, நெல்லையில் ரூ. 32 கோடி என்ற அளவில் மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளன. நாட்டிலேயே ஒரே நாளில் அதிக அளவில் தமிழகத்தில்தான் மது விற்பனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *