சினிமாவை ஃபாலோ பண்ணாதீங்க – மாணவிகளுக்கு த்ரிஷா அறிவுரை

சென்னை ஆகஸ்ட் 28

திரைப்படங்களை மாணவிகள் சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்றக் கூடாது என்று மாணவிகளுக்கு நடிகை த்ரிஷா அறிவுரை கூறியுள்ளார்.

யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக கை திரிஷா செயல்பட்டு வருகிறார். இன்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு திரிஷா பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,
பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வரவேண்டும். திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்ற கூடாது.
இவ்வாறு அந்த விழாவில் நடிகை த்ரிஷா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *