இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு

சென்னை, அக்டோபர்-03

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கேசி கருப்பணன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு குறித்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் நேரக்கட்டுப்பாட்டு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.

இந்த ஆண்டும் புதுமையான பட்டாசு ரகங்கள் வந்திருப்பதால், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுபாடு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தரப்படும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறினார்.

உடலுக்கு கடுமையான தீங்குகளை விளைவிக்கக் கூடிய அஜினமோட்டோ என்னும் வேதிப்பொருளை தமிழகத்தில் தடை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், விரைவில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *