ஊரடங்கிற்கு பிறகு 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம்..கட்டுப்பாடுகள் என்னென்ன?..

ஊரடங்கிற்கு பிறகு 50% பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிமனைகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை, மே-7

தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

• தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும்.

• ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

• ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்.

• ஒவ்வொரு முறை பயணத்தின் போது ஓட்டுநர் தன்னுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.

• ஓட்டுநர் இருக்கை திரை கொண்டு மூடப்பட வேண்டும்.

• பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் உள்ள இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

• ஓட்டுநர் முகக்கவசம், கையுறை அணிந்திருத்தல் வேண்டும்.

• ஊரடங்கு முடிந்த பிறகு அரசுப் பேருந்துகளில் பயணிகள் அமர இருக்கைகளில் மார்க் செய்ய வேண்டும்.

• பயணிகள் சம இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

• ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் பேருந்துகள் முழுமையாக கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திட வேண்டும்.

• ஏசி ரக சொகுசு பேருந்துகள் இயக்கத்தை பயன்படுத்த வேண்டாம்.

• முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி.

• வரிசையில் நின்று பேருந்தில் ஏற வேண்டும்.

• கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்த ஏற்பாடு.

*பயணிகள் இருக்கையில் அமர மார்க் செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் 6 அடி இடைவெளி அவசியம்.

*பேருந்தின் ஜன்னல்கள் கட்டாயமாக திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும்.

*பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *