தமிழகத்தில் இவ்வளவு அவசரமாக மதுக்கடைகளை திறப்பது ஏன்? – ராமதாஸ் ட்வீட்

“மதுவையே முதன்மை வருவாய் ஆதாரமாக கொண்டிருக்கும் புதுச்சேரியில் கூட மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், நாம்?” என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை, மே-7

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளை திறப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.

புதுவையில் கடைகள் திறக்கப்படாத போது தமிழகத்தில் ஏன் திறக்கபடுகின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில், மதுவையே முதன்மை வருவாய் ஆதாரமாக கொண்டிருக்கும் புதுச்சேரியில் கூட மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், நாம்?. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கேரளம் தடை விதித்திருக்கிறது. கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா? என்று பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *