தமிழகத்தில் 33% பணியாளர்களுடன் கோவில் அலுவலகங்கள் இயங்க அனுமதி.. பக்தர்களுக்கு அனுமதி இல்லை..

தமிழகத்தில் 33% பணியாளர்களுடன் கோவில் அலுவலகங்கள் இயங்க இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

சென்னை, மே-7

இது குறித்து, அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அனைத்து கோவில்களும் ‛அ’ மற்றும் ‛ஆ’ பிரிவு அலுவலர்கள் 33% பணியாளர்களுடன் கோவில் அலுவலகங்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் தினமும் அலுவலகத்திற்கு வர வேண்டும். பணிக்கு வரும் அனைத்து பணியாளர்கள் முகக்கவசம், தனிமனித சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ள பணியாளர்கள் பணி செய்ய அனுமதிக்க கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர பக்தர்கள் வழிபாடு உள்பட வேறு யாருக்கும் அனுமதி இல்லை. கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றைவையும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *