தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரிப்பு.. முதல்வர் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரித்து முதல்வர் எடப்பாட பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும் இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-7

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 59-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *