பூஜையுடன் தொடங்கியது தளபதி 64

சென்னை, அக்டோபர்-03

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

மாநகரம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

தளபதி-64 என்று தற்காலிகமாக குறிப்பிடப்படும் இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, மலையாள நடிகர் அந்தோனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கவுள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. கத்தி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி-64 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

இந்நிலையில், தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது. நடிகர் விஜய், விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா, அனிருத் உள்ளிட்டோர் திரைப்பட பூஜையில் கலந்துகொண்டனர். இதனை தொடர்நது #Thalapathy64Pooja என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *