இந்தியாவில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் – மத்திய அரசு

இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் திறக்கப்பட உள்ளது.

டெல்லி, மே-5

இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நாட்டில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *