இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 46,711 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,433லிருந்து 46,711- ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,727லிருந்து 13,161-ஆக அதிகரித்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 1,583- ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மே-5

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 13,161 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 14,541 பேரும், குஜராத்தில் 5,804 பேரும், தில்லியில் 4,898 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *