தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா.. ஒரேநாளில் 508 பேருக்கு பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னை, மே-5

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;-

தமிழகத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,537 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 279 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,008 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று இருவர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் புதிதாக 68 பேருக்கும், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டில் தலா 38 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், இன்றைக்கு புதிதாக இருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *