மீண்டும் கேரளாவில் வேலையை காட்ட தொடங்கிய கொரோனா.. 2 நாட்களுக்கு பிறகு 3 பேர் பாதிப்பு..

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொச்சி, மே-5

இந்தியாவில் கேரளாவில்தான் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட உடன் 20 ஆயிரம் கோடி அளவிலான நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் பினராயி விஜயன் ஒதுக்கினார். மேலும், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராத வகையில் அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்றடைய வழிவகை செய்தார். இதனால் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அந்த இடத்தை தனிமைப்படுத்தும் பணி எளிதாக இருந்தது. அதேநேரத்தில் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அத்துடன் பரிசோதனையை அதிகப்படுத்தியது.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக கேரள மாநிலத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. ஆகவே முதல்வர் பினராயி விஜய் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மூன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 34-ல் இருந்து 37-ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *