தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, மே-5

ஊரடங்கு காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுபோக்குவரத்து என அனைத்தும் முடக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கு அமலில் இருப்பதால் மின் கட்டணத்தை செலுத்துவதில் விலக்கு அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மே 18ஆம் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் மின் கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும் மின் கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க கூறிய நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசும், மின்சாரத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *