சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.. தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால், அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 7 ஆம் தேதி அன்று திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, மே-5

தமிழகத்தில் மே 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மே 7-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,724 ஆக உள்ளது. திருவிக நகர், ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

தமிழகத்தின் கொரோனா அபாயப் பகுதியாக சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மாறியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் கொகரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *