கோவை தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் பம்பரமாய் சுழன்று நிவாரணம் வழங்கும் அமைச்சர் வேலுமணி..!

ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அமைச்சர் வேலுமணி நிவாரணம் வழங்கி வருகிறார்.

கோவை, மே-4

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் மக்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஏழை எளிய மக்கள் பசியால் வாடதவாறு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, அதிமுக மற்றும் தமிழக அரசு சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் மக்களுக்கு நிவாரண பொருட்களாக வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் இந்தபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தனது தொகுதியான தொண்டாமுத்தூர் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி பகுதி மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதேபோல், ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் ந.மு சுங்கம் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் வேலுமணி நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

இதனால், அப்பகுதி மக்கள் அமைச்சர் வேலுமணிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *