ஐ.என்.எக்ஸ் வழக்கு – ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு

புதுடெல்லி, அக்டோபர்-03

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.  பின்னர், சிதம்பரத்தை செப்டம்பர் 5-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து மீண்டும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *