தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா – கிடுகிடு உயர்வால் மக்கள் அச்சம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மே-4

கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உள்ளது. மேலும், ஆயிரத்து 409 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *