கொரோனாவிலும் அடங்காத குடிமகன்கள்.. கால் கடுக்க வெயிலில் காத்திருந்த மதுபிரியர்கள்..

47 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்து மதுபான வகைகளை வாங்கிச்சென்றனர்.

மே-4

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றாம் கட்ட ஊரடங்கின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கோவாவில் 47 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சில கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சிவப்பு மண்டலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஊரடங்கால் மது குடிக்க முடியாமல் தவிப்பில் இந்த குடிமகன்கள், இன்று கடை திறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே கடை முன்பு வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். கடைகள் திறக்கப்பட்டதும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *