கோவை கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமியர்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கிய அமைச்சர் வேலுமணி..
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடியாக சென்று வழங்கி வருகிறார்.
கோவை, மே-3

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் மக்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஏழை எளிய மக்கள் பசியால் வாடதவாறு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அதிமுக மற்றும் தமிழக அரசு சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் மக்களுக்கு நிவாரண பொருட்களாக வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் இந்தபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த சூழலில், தனது தொகுதியான தொண்டாமுத்தூர் கரும்புக்கடை பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.

இதேபோல், கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தெலுங்குபாளையம் பகுதி மக்களுக்கும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

