கொரோனாவால் நேர்ந்த விநோதம்.. குச்சிகளை பயன்படுத்தி மாலை மாற்றிக்கொண்ட ஜோடி..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மும்பையில் குச்சிகளைப் பயன்படுத்தி மாலை மாற்றிக்கொண்டு வித்தியாசமான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மும்பை, மே-3

கொரோனை வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் முன்னதாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எளிமையாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மும்பையில் ஒரு திருமணம் வித்தியாசமான முறையில் நடந்துள்ளது. சமூக இடைவெளியை வலியுறுத்தும் நோக்கில், திருமணத் தம்பதிகள் திருமணத்தின் போது குச்சிகளைப் பயன்படுத்தி மாலைகளை மாற்றிக்கொண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *