அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தேசிய விருது வழங்கினார் பிரதமர் மோடி

அகமதாபாத் அக்.2.  

ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் நாட்டிலேயே, தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்கான தேசிய விருதினை   தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.    

   மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், கிராமங்களில் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பின் முன்னேற்றம் அடிப்படையில், தூய்மை கணக்கெடுப்பு நடத்தி நாட்டிலுள்ள மாநிலங்கள், மாவட்டங்களை தரவரிசைப் படுத்தும் திட்டத்தை கடந்த 2018 ஆண்டு அறிமுகப்படுத்தியது.

சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு

அதன்படி 2019 ம் ஆண்டு தூய்மை கணக்கெடுப்பு பணி, கடந்த ஆகஸ்டு 17 ந் தேதி முதல் செப்டம்பர் 5 ம் தேதி வரை தனியார் நிறுவனம் மூலம் நாடு முழுதும் ஊரகப் பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள 690 மாவட்டங்களில், 17,400 த் கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் தூய்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.          தமிழ்நாட்டில் 31 ஊரக மாவட்டங்களில் உள்ள 800க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த தூய்மை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் கிடைக்கப்பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாடு தேசிய அளவில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விருது

இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று மாலை நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரக தூய்மை கணக்கெடுப்பில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப் பட்டதற்கான மத்திய அரசின் தேசிய விருதை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.  

கணக்கெடுப்பும், களப்பணிகளும்                                                                                                                                             

தூய்மை ஆய்வு கணக்கெடுப்பு பணிகள், 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.              அதாவது பொது இடங்களாகிய பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமச் சந்தைகள், வழிபாட்டு தலங்கள்  ஆகியவற்றின் தூய்மை நிலை குறித்து நேரடி கள ஆய்வு  மூலம் 30 சதவீதம் தூய்மை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

வட்டார வளர்ச்சி அலுவலர்., ஊராட்சி செயலர், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சுகாதார ஊக்குனர், செவிலியர்கள், தூய்மை காவலர்கள், மக்கள் ஆகியோரிடம், சுகாதாரம் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டு நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் பல்வேறு தகவல்கள் அறிந்த முக்கிய நபர்கள் மற்றும் பொதுமக்களிடம் தூய்மை குறித்த கருத்து 35 சதவீதம் கேட்கப்பட்டுள்ளது.  

மேலும் வீடுகளில் கழிப்பறை வசதிகள், தூய்மைக்கான கட்டமைப்பு வசதிகளின் செயல்திறன் முன்னேற்றம் குறிப்பாக, ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், ஆகியவை பற்றி 35 சதவீதம் பற்றி கள ஆய்வு செய்யப்பட்டது.    

 இந்த ஆய்வுகளில் மாவட்டத்திற்கான மதிப்பெண்கள் கிராமங்கள் பெறும் மதிப்பெண்களின்  சராசரி ஆகும். அதே போல் மாநிலத்திற்கான மதிப்பெண்கள் மாவட்டங்கள் பெறும் மதிப்பெண்களின் சராசரியாகும்.         மேற்படி அகில இந்திய அளவில்   மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைக்கப்பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாடு தேசிய அளவில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *