இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்தது..1306 பேர் இதுவரை உயிரிழப்பு..

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

டெல்லி, மே-3

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 37 ஆயிரத்து 776 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் 40 ஆயிரத்து 263 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 487 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவியவர்களில் 28 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு நாடு முழுவதும் இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10 ஆயிரத்து 886 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *